அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு இ.அஎ.ஆர்.பிரிவில் கல்வி
பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் வெள்ளி விழாவை விமரசியாக கொண்டாடினர்.
விழாவிற்கு ஆசிரியர்கள் திருநாவுக்கரசு கிறிஸ்டோபர் சிவமூர்த்தி முன்னாள் தலைமை ஆசிரியர் தாமஸ் மனைவி எலிசபெத் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் தணிகைவேல் முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் தங்களுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பேசினார்கள் ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினார்கள். அவர்களுடைய நண்பன் திருமண நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் .மேலும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களுடைய வெள்ளி விழாவை கொண்டாடினர். பள்ளியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு பள்ளிக்கு25 அசோக மரக்கன்று10 மின்விசிறி வழங்கினர்.
எங்களைப் போல் அனைத்து முன்னாள் மாணவர்களும் அரசு பள்ளிக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் உயர் கல்வியில் அனைத்து மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விழாவினை 99 ஆம் ஆண்டு முன்னாள் மாணவரும் பாதுகாப்பு படை வீரருமான சித்திக் மற்றும் ஜான்சன், ஏ.துளசிதாஸ் ஒருங்கிணைத்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 90% ஆக உயர்த்தியதை பாராட்டி வாழ்த்துக்களையும்
தங்கள் நன்றியையும் தெரிவித்தனர்.
வருடமும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி தங்களால் முடிந்த உதவி பள்ளிக்கு செய்வதாக உறுதி அளித்தனர்.