மணலி விரைவுச் சாலையில் இடைவெளியின்றி மையதடுப்பு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் இடைவெளி கோரி போராட்டம். பேச்சுவார்த்தையில் இடைவெளி விட ஒப்புதல்.
துறைமுகம் முதல் பஞ்செட்டி வரை 4வழி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் மணலி விரைவுச்சாலை எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சுமார் 3கி.மீ தூரம் இடைவெளி யின்றி மையத்தடுப்பு அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில் முருகப்பா நகர், ஜோதிநகர், TKS நகர் என 3 பேரூந்து நிருத்தங்கள் உள்ளது. இந்த மூன்று பேரூந்து நிருத்தங்களில் இறங்கும் பாதசாரிகள் சாலையை கடக்க இடைவெளி விடாமல் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றது.
TKS நகர் பேரூந்து நிருத்தம் அருகில் இடைவெளி விடாமல் தடுப்பு சுவர் கட்ட கூடாதென மாமன்ற உறுப்பினர் தலைமையில் பகுதிவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தங்காடு காவல் ஆய்வாளர் ராஜீவ். போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பேபி, ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
11/2 ஆண்டுகளாக போக்குவரத்து காவல்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மையடுப்பில் பாதசாரிகள் செல்ல இடைவெளி வேண்டும், ஜோதிநகர், முல்லைநகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் ரவுண்டானா அமைத்து வாகணங்கள் போக அனுமதிக்க வேண்டும். இருபக்கமும் சர்வீஸ் சாலை அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகிறோம். பகுதிசபை கூட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு கோதண்டம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கப் பட்டுள்ளது.
மாநகராட்சி மன்றத்தில் கேள்வி எழுப்பி மேயர் அவர்கள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு கடிதம் எழுதப் பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாமமன்ற உறுப்பினர் முதல்வர், தலைமைசெயலாளர், மேயர், ஆணையர், பாராளுமன்ற உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலை அலுவலர், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆகியோருக்கும் இக்கோரிக்கைககள் மனுவாக கொடுக்கப் பட்டுள்ளது.
ஆனாலும் எந்த அசைவும் இல்லை. மையத்தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கி வேகமாக நடைபெற்று வந்தது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பாதசாரிகள் கடந்து செல்ல இடைவெளி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து வந்த மாமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் மையத்தடுப்பு பணி நடக்க கூடாது என பேசினார் இறுதியில் பாதசாரிகள் கடக்க இடைவேளி அமைக்கப் படும் என்று உறுதி அளித்தனர். அதுவரை பணி நடக்காது என்றும் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப் பட்டது.
இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு செயலாளர் கதிர்வேல், தெற்கு செயலாளர் கருணாநிதி, பகுதிக்குழு உறுப்பினர்கள் புஷ்பா, வெங்கட்டையா ஆகியோர் பங்கேற்றனர்