திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஊத்துகாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19- வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மூத்த தோழர் கணேசன் தலைமையில் ஊத்துக்காடு நடுத்தெருவில் நடைபெற்றது. மாநாட்டின் கொடியினை மூத்த தோழர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் ஏ. மருதையன் ஏற்றி வைத்தார்.
தெட்சிணாமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். சத்யராஜ் செயலாளர், சின்னதுரை துணை செயலாளர், மதியழகன் பொருளாளர் என அறிவித்து இன்றைய அரசியல் நிலைகளையும், எதிர்கால அரசியல் நிலைகளையும் குறித்து பேசினார். கிளை செயலாளர் வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார்,
வாதம், பிரதிவாதம் நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட தோழர் விஜயகுமார் தீர்மானங்களை வாசித்தார். 01. திருமலை ராஜன் வடக்கு வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும். 02. ஊத்துக்காடு மூன்று தெருக்கள் இணையும் இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும். 03. அருவம் குளத்து கரையில் ஈமச்சடங்கு மண்டபம் கட்டித்தர வேண்டும். 05. ஊத்துக்காடு ஆதிதிராவிடர்களுக்கு 500 க்கும் மேற்பட்ட குடும்ப கார்டுகள் உள்ளது.
அவர்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உணவு பொருட்கள் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. ஆகவே அப்பகுதியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும்.06. ஊத்துக்காடு வருவாய் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் புதிய செயலாளர் சத்யராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.