தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரஷர்கள் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரஷர்களில் இருந்து ஜல்லி எம் சாண்ட் பி. சாண்ட் போன்ற கனிம வளங்களை வாகனங்களின் மூலம் எடுத்துச் செல்ல 12 6 2025 முதல் இணையதளம் மூலம் மட்டுமே நடைச் சீட்டு வழங்கப்படும் இதன்படி கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற உரிமையாளர்கள் புவியியல் மற்றும் சுங்கத் துறை இணையதள முகவரியான http:,//www.mimas.tn.gov.in மூலம் விண்ணப்பம் செய்யலாம் அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளம் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு நடைச்சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும் நடைச் சீட்டு வழங்குவதற்கு நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படாது
எனவே கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற கிரஷர் உரிமையாளர்கள் இணையதளத்தின் மூலம் நடைச்சீட்டிற்கு விண்ணப்பம் செய்து நடைச் சீட்டு பெற்றுக் கொள்ளுமாறு சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப் பித்து பயன்பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்