தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ. பெரியசாமி வணிகவரித் துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் கம்பம் என். ராமகிருஷ்ணன் சோழவந்தான் ஆ
வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தனர்
தண்ணீரை திறந்து வைத்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ. பெரியசாமி கூறும் போது வைகை அணையில் இருந்து பெரியார் பாசனப்பகுதிகளில் இருபோக பாசனப்பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45001 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் 41 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைக்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மொத்தம் 120 நாட்களுக்கு.6739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்க்கு உட்பட்ட 1797 ஏக்கர் நிலங்களும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட.16452 இடங்களும் என மொத்தம் 45401 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது
எனவே மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் இவ்வாறு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ. பெரியசாமி கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் வைகை பெரியாறு அடி நிலக் கோட்டம் ந. பாரதிதாசன் சிவபிரபாகர் பெரியார் பிரதான கால்வாய் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.