ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தலைவர், வைத்திலிங்கம், எம்.பி., ஆகியோர் தலைமையில் அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து கோவிலில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதே போல் புதுச்சேரி முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசல் , ரயில்வே நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்த ராமன், உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.