திருவாரூர்
விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரம் , இடுபொருள் தயாராக வைத்திருக்க வேண்டும் மேலும் தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் உத்தரவு.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயம் மருத்துவம் நகராட்சி வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
அப்போது தற்போது நடைபெற்று வரும் விவசாய பணிகளுக்கு தேவையான விதை மற்றும் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார் .
தொடர்ந்து மாவட்ட வேளாண் துறை அலுவலருக்கு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி முன்கூட்டியே உரம் உள்ளிட்ட ஈடுபொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் மேலும் தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்து உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுத்து செய்தியாக வெளியிட வேண்டும் என கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் உத்தரவிட்டார்