அச்சரம்பாக்கம் வட்டாரத்தில் ஒரத்தியில் குறுவை சாகுபடியில் சோனியா காந்தி என்பவர் நெல் இயந்திர நடவு செய்ததை செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குநர் பிரேம் சாந்தி பார்வையிட்டார்.
வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சக்திவேல், விநோத் உடன் இருந்தனர். வேளாண்மை இணை இயக்குநர் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் நெல் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் நிண்ணூட்ட உரம் மானியத்தில் வழங்கினார்.
உயிர்உரத்தை நெல் ஊறவைக்கும் பொழுது அந்த நீரில் சேர்த்து ஊற வைக்கலாம் அல்லது தொழுவுரத்துடன் கலந்து மண்ணில் இடலாம் அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்திக் கொடுக்கும் பாஸ்போபாக்டீரியா மண்ணில் உள்ள பாஸ்பரஸ் சத்தை பயிர் எடுத்துக் கொள்ளும் விதமாக கரைத்துக் கொடுக்கும். நுண்ணூட்ட உரத்தில் துத்தநாகம் ,இரும்பு , மாங்கனிசு ,தாமிரம் போன்ற பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன .
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ உரத்தை மண்ணில் கலந்து அடி உரமாக இடுவதால் பயிர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்படாமல் இருக்கும் என அறிவுரை வழங்கினார்.குறுவை தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூபாய் 4000 பின்னேற்பு மானியமாகவும் ,உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வலியுறுத்தினார்.