திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் வட்டம் மூலனூர் பகுதியில் ரூ.1.56 கோடியில் தார் சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், மூலனூர் ஊராட்சி கிராமங்களில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைத்தல் மற்றும் பழைய தார் சாலைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை இன்று நடைபெற்றது இதில் தமிழக மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கூறியதாவது:
“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூலனூர் ஊராட்சியில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.”அதன்படி,பெரமியம் முதல்
அய்யம்பாளையம் எம்ஜிஆர் நகர் செல்லும் சாலை – ₹43.29 லட்சம் மதிப்பில் பலப்படுத்தல்.மூலனூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கில்பட்டி பகுதியில் – ₹72.03 லட்சம் மதிப்பில் மண் சாலை → தார் சாலையாக மாற்றுதல்.வெங்கில்பட்டி முதல் திருப்பூர் மாவட்ட எல்லை (மேற்கு) செல்லும் சாலை – ₹25.19 லட்சம் மதிப்பில் பலப்படுத்தல்.
இவ்வாறு மொத்தம் ₹1.56 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவித்தார்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு, மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி, பெரமியம் ஊராட்சி துணைத் தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.