திருவாரூர் மாவட்ட பகுதியில் முதல் முறையாக நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை
மருத்துவர்கள் சாதனை சென்னை போன்ற பெரு நகரங்களில் நடைபெறுவது போல ஆஞ்சியோகிராம் ஆஞ்சியோ பிளாஸ்ட் பைப் பாஸ் சர்ஜரி உள்ளிட்ட இருதயம் சார்ந்த சிகிச்சை தற்பொழுது திருவாரூர் பகுதியிலும் நடைபெற்று வருகிறது..
சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரபகுதிகளில் மிகவும் வசதி படைத்தவர்களால் மட்டுமே அதிக பொருட்செலவில்..இருதய நோய்க்கு சிகிச்சை வரும் நிலையில் மிகவும் பின்தங்கிய விவசாயக் கூலிகள் அதிகம் வாழக்கூடிய திருவாரூர் பகுதியில் இருதய நோய்க்கு சென்னை திருச்சி கோவை மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு செலவினம் அதிகமாக ஆவதால் இருதய சிகிச்சை செய்ய செல்ல முடியாத நிலை இருந்தது.
ஆனால் தற்போது கடந்த 35 வருடங்களாக இயங்கி வரும் திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் இருதய அறுவை சிகிச்சை அனுபவிக்க மருத்துவ குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் பகுதி நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த முருகேசன் என்பவருக்கு தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது மிகவும் குறைந்த செலவில்.. மிகவும் அனுபவிக்க மருத்துவர்களான டாக்டர் குமரவேல், டாக்டர் புனிதகுமார், டாக்டர் ஷர்மிளா சக்திபாலன், டாக்டர் கபிலன் ஆகிய மருத்துவர்கள் குழுவினரால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும்,முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவ மனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.