துறையூரில் நடைந்த எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அதிகாரி கூறினார்
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் முத்து தலைமையில் ஜூன் 21 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விற்பனை அதிகாரி உதயா அப்பாஸ் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.அப்பொழுது பாதுகாப்பான முறையில் உள்ள புதிதாக வடிவமைக்கப்பட்ட 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும்,அதை எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அந்த சிலிண்டர் நூறு சதவீதம் பாதுகாப்பானது
என்றும் அதற்கு எந்தவித முகவரி சான்றும் தேவை இல்லை என்றும் அதிகாரி கூறினார்.இதனை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு முறைகள் பற்றி ஏஜென்சிகள் தெரிவித்தனர்.கேஸ் கனெக்சன் முகவரி மாற்றத்திற்கு வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அவசியம் வீட்டு ஒப்பந்த பத்திரம் தேவை என்றும் கூறினர். சில இடங்களில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதி தருவதில்லை என்ற நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
வெ.நாகராஜூ
திருச்சி மாவட்ட செய்தியாளர்