தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு எம்பி பரிசு வழங்கி பாராட்டு.
தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்தவர் மாணவி நபிலா இவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 -தேர்வு எழுதினார் இந்த தேர்வில் குரூப் 1 -இல் 27வது இடமும் மற்றும் குரூப் 2 வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தார்
தேர்வாணயம் நடத்திய இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்று அரசு பணிக்கு தேர்வாகி தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி நபிலா இல்லத்திற்கு நேரில் சென்று தேனி பாராளுமன்றஉறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மாணவியின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு பரிசு வழங்கி மனதார பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணிந்து நில் அறக்கட்டளை தலைவர் தொழில் அதிபர் எம் வேல் பாண்டியன் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.