செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று வெள்ளிக்கிழமை
காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலாம் ஆண்டு துறைத்தலைவர் பி.ரகு வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ஜி.இளங்கோவன் சிறப்புரையாற்றினார்,
கல்லூரியின் தாளாளர் டாக்டர் கோ.ப.செந்தில்குமார் கலந்து கொண்டு வாழ்க்கையில்
உயர விரும்பினால் பெற்றோர்களின் அறிவுரையை ஏற்று நடக்கவேண்டும்.
செல்போன் பயன்படுத்தும் நேரத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும், தீயபழக்கங்களை தவிர்த்து, நம் எண்ணங்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கி மாணவர்களை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பித்தார்.
இதில் கணினி துறைத்தலைவர் ஜெ.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் சிவில் துறைத்தலைவர் ஆர்.இளவழகன்,மெக்கானிக் துறைத் தலைவர் ஜெ.ஆதிகேசவன்,துறைத்தலைவர் எ.பிரபு,துறைத் தலைவர்
எம்.வெங்கடசுப்பிரமணியம் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள், கல்லூரி நிர்வாக அதிகாரி ஜெ.ஹரிகிருஷ்ணன், தலைமை கணக்கு அதிகாரி ஆர்.பட்டு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியாக,இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.