புதுச்சேரி நகராட்சி மற்றும் வில்லியனூர் கொம்மியூன் மூலம் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை இயக்குனர் திரு. சக்திவேல் அவர்களை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது வில்லியனூர் நகரப்பகுதி, மனவெளி, சுல்தான்பேட்டை, ஜி.என். பாளையம், ஓதியம்பேட், பெரியபேட், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், கொம்பாகம் வார்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்தும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது, நடைபெறுக்கொண்டிருக்கும் பணிகளை விரைந்து முடிப்பது, குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, அதிகாரிகள் பற்றாக்குறையை தீர்த்து பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினார்.