திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
“எம்ஜிஆர் பாடல் கேட்டதற்கே தாக்குதல் – கண்ணீர் மல்கும் பெரிய வீரன்; திமுகவினரின் கொடூரத்தை கண்டிக்கும் கிராமம்!”
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே கிணத்தாம்பட்டி கிராமத்தில் வேதனையூட்டும், அதே நேரத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. எம்ஜிஆர் பாடல் கேட்டதற்காக ஒரு விவசாயத் தொழிலாளி தாக்கப்பட்டதுடன், அவமானத்தால் உயிரை இழக்க முயற்சித்தது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தனின் மகனும், 65 வயதான பெரிய வீரன் என்பவர் விவசாய வேலையால் வாழ்க்கையை நடத்தி வருபவர். இவர் தனது குடும்பத்தினருடன் குடிமங்கலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் தீவிர விசுவாசியாக இருப்பதோடு, தினமும் காலையிலிருந்து இரவு வரை அவர்களது திரைப்படப் பாடல்களைக் கேட்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
அதன்படி, இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது செல்போனில் பதிவு செய்திருந்த “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்ற எம்ஜிஆர் பாடலை கேட்கும் போது, ராணி டீக்கடைக்கு சென்றிருந்த பெரிய வீரனை, அதே இடத்தில் டீ குடிக்க வந்த முத்துக்குட்டி கவுண்டர் என்பவர், திமுக ஆதரவாளராக இருக்கிறார் இவர் பெரிய வீரன், ஜாதி பெயரை உச்சரித்து, கன்னத்தில் மூன்று முறை திருப்பி திருப்பி கடுமையாக தாக்கியுள்ளார்.
“நீ எம்ஜிஆர் பாடல்களைக் கேட்கிறாய், திமுக ஆட்சியில் இருந்து நலத்திட்டங்களை வாங்கிக்கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடுறே!”
எனக் கூறி அவதூறாக பேசியும்,“என் கை தீட்டுப் பட்டுருச்சு” என்கின்ற மோசமான ஜாதிப் பாசாங்கு பேச்சையும் கூறி,அவரை அடித்ததோடு, பாக்கெட்டில் இருந்த பெரிய வீரன் செல்போனைப் ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.
முத்துக்குட்டி தாக்குதலுக்குப் பிறகு முகத்தில் தண்ணீர் தெளித்து பெரிய வீரனை மீட்ட அப்பகுதியினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கும் பெரிய வீரனுக்கு ஜாதியை இழிவுபடுத்தி, கேலி செய்ததால், பெரும் மனவேதனை அடைந்த அவர் இரண்டு நாள் கழித்து இன்று அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து ஒரு லிட்டர் மண்ணெண்ணையை குடித்து, மீதியை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
அவரது மனைவி தங்கமணி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு, அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மண்ணெண்ணையை வாந்தி மூலம் வெளியேற்றிய பின், பெரும் குடல் எரிச்சல், புண்கள் ஆகியவற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முத்துக்குட்டி மற்றும் பெரிய வீரன் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பெரிய வீரன் கண்நீர் மல்க,“எம்.ஜி.ஆர் பாடல் கேட்டதற்காகவே என்னை அடித்த திமுகவினரை கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதியும், சமத்துவமும் கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாட்டில் இன்னும் கிராமப்புறங்களில்
மக்களின் மதிக்க வேண்டிய அரசியல் சூழ்நிலை எப்போது உருவாகும் எனும் கேள்விகள் எழுந்துள்ளன.
பேட்டி: திரு.பெரியவீரன்
கூலி தொழிலாளி பாதிக்கப்பட்டவர்.