கோவை சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் டாக்டர் முத்துசரவணகுமார் பேச்சு
நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களின் அயராத பணி மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி இந்தியா தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது..
இதன் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
முத்தூஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பான சேவைகளை பாராட்டும் விதமாக முத்தூஸ் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
தொடர்ந்து மருத்துவ துறையில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட டாக்டர் முத்து சரவணக்குமாருக்கு மருத்துவமனை செவிலியர்கள்,ஊழயர்கள் என அனைவரும் இணைந்து பூச்செண்டு வழங்கி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்..
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் பேசுகையில் தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது டாக்டரின் நம்பிக்கையான வார்த்தைகள் தான் தமக்கு நம்பிக்கை அளித்ததாக நெகிழ்வுடன் கூறினார்..
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் முத்து சரவணக்குமார்,நெருக்கடியான சூழலில் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலில் மருத்துவர் அளிக்கும் தன்னம்பிக்கையே முதல் சிகிச்சை என தெரிவித்த அவர் கடவுள் படைத்த மனித உயிர்களை காக்கும் பணியை செய்யும் மருத்துவர்கள் செய்யும் பணியே உலகில் உன்னதமான பணி என நெகிழ்வுடன் கூறினார்..