துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கமும், அன்னை மருத்துவமனையும்
இணைந்து நடத்தும் டிரீம் ஆண்டின் முதல் முப்பெரும் விழா
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கமும்,
அன்னை மருத்துவமனையும் இணைந்து நடத்தும் “DREAM 7” ஆண்டின்
முதல் முப்பெரும் விழா நடைபெற்றது. துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கத்தின் 2025 – 26 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக பதவியேற்றுள்ள ஜி.சேதுபதி தலைமையில் நடைபெற்ற முதல் முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக 01-07-2025 அன்று காலை 10 மணி அளவில் ஓங்காரகுடிலுக்கு அரிசி வழங்கல் நிகழ்வும்,
இரண்டாம் நிகழ்வாக காலை 10 .45 மணி அளவில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு
மருத்துவர்களை கெளரவித்தல் நிகழ்வும் மூன்றாம் நிகழ்வாக காலை
11 .30 மணி அளவில் துறையூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள “தி
ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி” சிறப்பு குழந்தைகள் பள்ளியில் “செல்லமே செல்லம்”மாவட்ட சிறப்பு திட்டம் துவக்கம் மற்றும் சிறப்பு குழந்தைகளை மகிழ்வித்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமாள் மலை ரோட்டரி சங்க சார்பில் பள்ளியில் உள்ள சுமார் 40 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், விளையாட்டு பொருட்கள், உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் செயலாளர் எஸ்.விவேகானந்தன், சங்க சேர்மன்(சிறப்பு திட்டங்கள்) கே.ரமேஷ் வரவேற்புரை ஆற்ற குடில் டி ஆர் மாதவன்,எஸ்பி. மணிகண்ட ஆனந்த், ஜி.பாபு, ஆர்.ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பிடிஜி பி.கோபாலகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் ஜெ.அரவிந்தன், டி.ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நிறைவில் சிறப்பு பள்ளி நிர்வாக இயக்குனர் சி. சாந்தகுமார் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்