இந்நிகழ்ச்சிக்கான காணொளி காட்சி காரைக்காலில் உள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்பொழுது காரைக்காலில் இருக்கக்கூடிய மீன்பிடித்துறைமுகமானது 2012-ல் ரூ.47.74 கோடி திட்ட மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டது. இன்றைய நிலையில் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்பிடி விசைப்படகுகள் மிகவும் நெருக்கமாகவும் 3-லிருந்து 4-கு அடுக்குகளாக நிறுத்தும் நிலையில் உள்ளது.

தற்பொழுது, காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்தில், பாதுகாவலர் அறை, பணிமனை, அலுவலகம், உணவகம், கழிவறை, ஒய்வு அறை, படகு நிறுத்தும் தளம், மீன் ஏலக் கூடம், வலைப் பாதுகாப்பு அறைகள், வலைப்பின்னும் கூடம், கழிவு நீர் சுத்தப்படுத்தும் நிலையம், பனிகட்டி உற்பத்தி நிலையம், மீன் பதப்படுத்தும் நிலையம் ஆகிய வசதிகள் உள்ளன. மீன்பிடிவிசைப்படகுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும், முன்பு இருந்ததை விட படகுள் நீளம் மற்றும் அகலம் அதிகமாக இருப்பதாலும்,

காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்தில் தற்பொழுது மீன்பிடிவிசைப்படகுகள் நெருக்கடியான நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், மோட்டார் பொருத்தப்பட்ட கண்ணாடி நுண்ணிழை மீன்பிடிபடகுகளை அரசலாற்றின் வடக்கு கரையிலிருந்து தெற்கு கரைப்பகுதியில் நிறுத்துவதற்கும் படகு நிறுத்தும் வசதிகளை ஏற்படுத்தும் விதத்தில், புதுச்சேரி அரசு எடுத்த இடைவிடாத முயற்சியின் காரணமாக, காரைக்கால் மீன் பிடித்துறைமுகத்திற்கு “திறன் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி (Development of Smart and integrated Fishing Harbour) திட்டத்தின் மூலம் நீடித்த மற்றும் பொறுப்பார்ந்த மீன்வள வளர்ச்சியினை நீலபுரட்சியின் மூலம் கொண்டு வருவதற்கு ரூ.130.17 கோடி மதிப்பிலான முன்மொழிவு (proposal) மத்திய அரசின் பங்களிப்புடன், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் (PMMSY) செயல்படுத்த, மத்திய அரசு நிர்வாக அனுமதி (Administrative approval) அளித்துள்ளது.

இதில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்துவதற்கு முல்லையாற்றின் வடக்கு கரையிலும், மோட்டார் பொருத்தப்பட்ட கண்ணாடி நுண்ணிழை மீன்பிடிபடகுகளை அரசலாற்றின் தெற்கு கரையிலும் நிறுத்துவதற்கும், இத்திட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் (infrastructures), திறன் மிக்க உள்கட்டமைப்பு வசதிகள் (smart infrastructures) மற்றும் நீல மற்றும் பசுமை உள்கட்டமைப்பு வசதிகள் (blue and green infrastructures) உள்ளடக்கிய வசதிகளுடன் காரைக்கால் மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது.இந்திய அரசின் முன்னோடி (Pilot) திட்டமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், காரைக்கால் மற்றும் தாமன் & டையூ ஆகிய இரு மாநிலங்களில் இந்த “திறன் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி (Development of Smart and integrated Fishing Harbour) திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த “திறன் மிக்க மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி (Development of Smart and integrated Fishing Harbour) திட்டத்தில் கீழ்க்காணும் வசதிகள் அமைக்கப்படவுள்ளது: உள்கட்டமைப்பு வசதிகள்:பாதுகாவலர் அறை, சரிவான படகு ஏற்றும் தளம், படகு பழுது நீக்கும் பணிமனை, படகினை பழுது நீக்க படகு ஏற்றி நிறுத்தும் தளம், அலுவலகம், உணவகம், கழிவறை, ஒய்வு அறை, படகு நிறுத்தும் தளம், மீன் ஏலக் கூடம், வலைப் பாதுகாப்பு அறைகள், வலைப்பின்னும் கூடம், கழிவு நீர் சுத்தப்படுத்தும் நிலையம், பனிகட்டி உற்பத்தி நிலையம், மீன் பதப்படுத்தும் நிலையம், உள் சாலை வசதி, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

திறன் மிகு வசதிகள்: ரேடியோ தகவல் தொடர்பு சாதனம், திறன் மிகு வசதிக்கு இணையம் தொடர்பான சாதனங்கள் (Internet of things), உணரிகளுடன் கூடிய தகவல் தொடர்பு இணைவமைவு (sensors communication networks), தகவல் மேலாண்மை அமைப்பு (data management system).தகவல் மேலாண்மை அமைப்புக்கான மென்பொருள் உருவாக்கம் (development or customization of software for data management)உற்கட்ட தகவல் தொடர்பு அமைப்பு (communication infrastructure including internal connectivity),

செயற்கைக் கோள் தகவல் தொடர்பு அமைப்பு (satellite communication systems), கம்பியில்லா தகவல் தொடர்பு சாதனம் (wireless networks).தொடர்பு கோர்வை சாதனங்கள் (networking equipments) மற்றும் இணைய வழி பாதுகாப்பு ஏற்பாடுகள் (cyber security measures)பாதுகாப்பு வசதிகள் (Safety and Security measures) மீன்பிடிபடகுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் (GPS, tracking devices, distress beacons, life jackets and rescue drones) பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துதல்

(surveillance cameras, drones, access control and other smart technologies)கடல் வழித்தடம் மற்றும் ரேடியோ தகவல் சாதனம் (navigational and radio-communication equipment)நீலம் மற்றும் பசுமை உற்கட்டமைப்பு வசதிகள்:புதுபிக்க தக்க ஆற்றலுக்கான அமைப்பு – சூரிய ஒளி மின் ஆற்றல் உற்பத்தி (renewable energy systems such as solar power plant)மழை நீர் சேகரிப்பு (Rain water harvesting system)தற்பொழுதுள்ள விளக்குகளுக்கு பதில் LED விளக்குகளாக மாற்றுதல் (conversion of conventional electric lighting system to LED lighting system)கழிவுகளை வகைப்படுத்தும் சாதனம் மற்றும் மறுசுழற்சி வசதிகள்

(Waste processing equipments and recycling facilities)மீன் கையாளும் சாதனம் (Fish handling systems)முக்காலி திருகு வசதி (tripod winch)ஊர்திப் பட்டை வசதி (conveyor systems)கழிவு நீர் மற்றும் தொழிலக கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் (sewerage including effluent treatment plant) பனிக்கட்டி எடுத்துச் செல்லும் ஊர்திப் பட்டை வசதி (movable conveyor systems for carrying ice)சுமை தூக்கும் இயந்திரம் (crane)பசுமை அமைப்பு மற்றும் தோட்ட அமைப்பு (greeneries and land scaping)மேற்கண்ட வசதிகளுடன் இந்த திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டமானது காரைக்காலில் செயல்படுத்தப்படும் பட்சத்தில் சுமார் 250 மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் சுமார் 1000 மீன்பிடி இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், மீன்பிடித்துறைமுக வசதிகளை பெறும். மேலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பலர் இத்திட்டத்தில் வேலை வாய்ப்பினையும் பெறுவர். மேலும் இத்திட்டமானது, அனைத்து வசதிகளுடனும், ஒரு முன்மாதிரி துறைமுகமாகவும், சர்வதேச தரத்துடனும், அனைத்து தர கட்டுபாடுகளை பெற்றிருக்கும் துறைமுகமாக அமையவுள்ளது.

இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கப்பட்டது. பின்பு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் புதுவை அரசின் துணை நிலை ஆளுநரின் தனிச்செயலரும் மீன்வளத்துறையின் செயலருமான திரு. டி . மணிகண்டன் இ ஆ ப அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர், திரு. N. ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும், இந் நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டபேரவைத் தலைவர், திரு. R. செல்வம் அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. A. நமசிவாயம், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. K. லட்சுமி நாராயணன் அவர்கள், மாண்புமிகு. வேளாண்துறை அமைச்சர் திரு. C. ஜெயக்குமார் அவர்கள், மாண்புமிகு குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு. P.R.N. திருமுருகன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு C. ஜான் குமார் அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவைத் துணை தலைவர் திரு. P. ராஜவேலு அவர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), திரு. S. செல்வகணபதி அவர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) திரு. Ve. வைத்திலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி முன்னிலை வகுத்தனர்.

இந் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், திரு. AMH. நாஜீம் அவர்கள், திரு PR. சிவா, திருமதி. C. சந்திர பிரியங்கா அவர்கள், திரு. M. நாகதியாகராஜன் மற்றும் திரு. GNS. ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறையின் அரசு செயலர்கள், மீன்வளத்துறையின் இயக்குநர், திரு. A. முஹமது இஸ்மாயில், இணை இயக்குநர் திரு. K. தெய்வசிகாமணி மற்றும் துணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.இந்திகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காரைக்கால் மீன்வளத்துறை, துணை இயக்குநர் திரு. J. நடராஜன் மற்றும் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு. A.S.P.S. ரவி பிரகாஷ் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *