புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை இணைந்து, பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மதிப்பிற்குரிய காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் செல்வி M. பூஜா, ஐ.ஏ.எஸ். அவர்கள் தொழில் பழகுநர் முகாம் நேர்காணல்களை பார்வையிட்டதுடன் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பு ஆட்சியர் அவர்கள் தலைமையேற்று முகாமில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 44 விண்ணப்பதாரர்களுக்கு தொழில் பழகுணர் பயிற்சி அணைகளை வழங்கினார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரும் பயிற்சி அதிகாரியமான C. சுகுணா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் காரைக்கால் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மகேஷ் (பொது சுகாதாரம்), காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி விஜய் மோகனா, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் அனுராதா, காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் தொழிற் பயிற்சி நிலைய ஆசிரியர்கள் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் பழகுனர்களை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன. இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சிக்காக சிறப்பாக பங்களித்து வரும் ஓ.என்.ஜி.சி, பி.பி.சி.எல், காரைக்கால் போர்ட், மின்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, பி.ஆர்.டி.சி,கேம்ப்ளாஸ்ட், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம் (ஆண்கள்), சுகாதாரத்துறை ஆகிய 12 நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகளை சார்பு ஆட்சியர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
பின்னர் நிகழ்ச்சியில் பயிற்சி அதிகாரி ஸ்ரீ சுகுணா அவர்கள் பேசிய போது ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் அனைவரும் அப்ரிண்டர்ஷிப் பயிற்சிக்கு தகுதி பெறுவர். மாதம் தோறும் ரூ.6,800 முதல் 10 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். நிறுவனங்கள் தங்களது அப்ரண்டீஸ்க்கு வழங்கும் ஊதியத்திற்காக மாதம் தோறும் 1500 வரை மீளளிப்பு பெறலாம். அப்ரண்டேஷிப் திட்டம் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, அட்மின்பார் பாரத் இயக்கங்களின் முக்கிய அங்கமாகும். இத்திட்டம் இளைஞர்களை தொழில் துறைக்கு தயாராக்கும் வல்லமை கொண்டது என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சார்பு ஆட்சியர் அவர்கள் பேசியதாவது :-
காரைக்காலில் திறமை வாய்ந்த இளைஞர்கள் மாணவர்கள் பலர் உள்ளனர். இவர்களை முன்னிறுத்தும் வகையில் இது போன்ற மத்திய அரசின் கீழ் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அரசின் இது போன்ற பொன்னான திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது திறன்களை மென்மேலும் வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும். இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் காரைக்கால் துறைமுகம், ஓ.என்.ஜி.சி, பி.பி.சி.எல், உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தொழில் பழகுணர் ஆணை பெற்ற அனைவரும் தங்களது திறன்களை மேலும் வளர்த்துக் கொள்வதுடன் நிறுவனங்களில் பங்கு கொண்டு இன்டெர்ன்ஷிப் முறைகள் மூலம் பல்வேறு விதமான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு வளர வேண்டுமென சார்பு ஆட்சியர் M. பூஜா, ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.