புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 78 லட்சம் செலவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை கழிவுநீர் சேகரிப்பு கிணற்றை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்:

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தாமரை நகர், கனி பாய் தோட்டம், திப்ராயப்பேட்டை ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக வீதியில் பாதாள வடிகால் கழிவு நீர் வெளியேறி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில் துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது. இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கர் அவர்களிடம் அதனை உடனடியாக பாதாள வடிகால் கழிவு நீரை உறிந்து எடுக்கும் வாகனம் மூலம் சுத்தம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்

உடனே சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களின் கோரிக்கை ஏற்று இளநிலை பொறியாளர் அவர்கள் அங்கு சுத்தகரிப்பு செய்யும் குழுக்களை வாகனத்துடன் அனுப்பினார்.

பின்னர் சில மணி நேரத்திலேயே பாதாளவடிக்கால் சுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறை மூலம் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கழிவு நீர் சேகரிப்பு கிணற்றை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று அப்பணியினை ஆய்வு மேற்கொண்டு பார்விட்டார். இப்பணியினை திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தான் பூமி பூஜை போட்டு சுமார் 78 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.

அப்பணி முடிந்து விட்டால் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவது குறைந்து விடும் உப்பளம் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி கழிவுநீர் நிரம்பிவிடுகிறது இந்த கிணறுற்றினால் அந்தப் பிரச்சினை வராது ஏனெனில் அனைத்து கழிவு நீர்களும் இதில் சேகரிக்கப்பட்டுவிடும் ஆதலால் அப்பணியை விரைந்து செய்து கொடுக்கும்படி அதிகாரியிடம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

உடன் கழக நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ் ,செல்வம் விநாயகமூர்த்தி, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *