பனை விதை நடவு நிகழ்ச்சி
பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரீஸ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஒயிட் டவுன், மற்றும் Rain மழைத்துளி உயிர்த்துளி அமைப்புடன் இணைந்து தமிழரின் தேசிய மரமான பனைமரம் மீட்பு பயணத்தில் தொடர்ந்து 6-ஆம் ஆண்டில் நடப்பு வருடம் 76 ஆயிரம் பனைமரம் நடும் நிகழ்வு புதுவை வீராம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது

பூரணாங்குப்பம் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார் வீராம்பட்டினம் கிராம மக்கள் குழு தலைமையில் மேதகு புதுச்சேரி கவர்னர் மருத்துவர்.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் முதல் பனை விதையை நடவு செய்து துவக்கி வைத்தார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாக சபாநாயகர் ஏம்பலம் R. செல்வம் அவர்களும், எம் எல் ஏ R. பாஸ்கர் (எ) தக்ஷிணாமூர்த்தி அவர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக D.தெய்வசிகாமணி இயக்குனர் நேரு யுவகேந்திரா V.ரமேஷ்கமிஷ்னர், அரியாங்குப்பம் கொம்யூன் அவர்கள், :டாக்டர் பிரமலா தம்பிவாணன் செவிலியர் கல்லூரி முதல்வர், ரொட்டேரியன் மூ. திருஞானம் தலைவர் ரோட்டரி கிளப் ஒயிட் டவுன் பாண்டிச்சேரி மற்றும் மூ.ராஜவேலு D. சதீஷ் , நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தனர் நிகழ்ச்சியை ஜெயந்தி ராஜவேல் அவர்கள் தொகுப்புரை நிகழ்தினார், நன்றியுரை ஆர். ஆறுமுகம் மண்வாசம் இளைஞர் மன்றம் கூறினார்
நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வலர்கள் உடன் இணைந்து வீராம்பட்டினம் கிராம பொதுமக்கள் சார்பாக தேவநாதன் மற்றும் நெய்தல் நிலம் பசுமை இயக்கம் தலைவர் ஆறுமுகம் செய்திருந்தனர்,
இதில் புதுச்சேரி கல்வித்துறை சார்பாக என் எஸ் எஸ் மாணவர்கள் 300 மாணவர்கள் மற்றும் புதுச்சேரி சமூக அமைப்பு நண்பர்கள், திருநங்கை குழுக்கள் இளைஞர் மன்றங்கள் பங்கு பெற்று சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது.