இன்று தேசிய நேர்மறையான சிந்தனை நாள்
நம்மைச் சுற்றி எப்போதுமே நேர்மறையான எண்ணங்களுடன்
(+ Positive Vibration) இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை
(-NegativeVibration ) எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

“தெரியாது’, “நடக்காது’, “முடியாது’ , “கிடைக்காது’ , “வராது,” “சரியாகாது”, என சொல்பவர்களை உங்கள் தெடர்பிலிருந்து விரட்டி விடுங்கள்.

எப்போதும் உற்சாகமாக இருங்கள்
சோகத்தை விட்டொழியுங்கள்.
எப்போதும் உற்சாகம் உங்களுக்கு கொப்பளிக்கும் வேலையையும் செய்யுங்கள்.

இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலையை பாருங்கள்.

மிகுந்த சக்தி மிக்கதாக (Powerfull) உணருங்கள்
உடல் வலிமை,பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி உறுதியான, தளராதமனவலிமை மிக மிக முக்கியமாகும்.
உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை.உடனே 😀 சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.

உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்…

நேசியுங்கள்.
உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.

உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை,
உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

பயணப்படுங்கள்.
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் நேர்மறையான (+Positive Energy) எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றியுடன், உங்கள் பயணம் …
உங்ளுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்…
சீனு.கந்தகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *