புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமையிலும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் மேல்நிலை கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய புதிய கற்றளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உங்கள் கடினமான உழைப்பால்தான் நல்ல சிறப்பான திறமை வாய்ந்த மாணவர்களை உருவாக்குகிறீர்கள் என்றும் ஒவ்வொரு மாணவர்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆசிரியர் இருப்பது உண்மை என்று கூறிய ஆட்சியர் அவர்கள் நானும் அரசு பள்ளியில் தான் படித்து IAS தேர்ச்சி பெற்று இன்று ஆட்சியராக பணிபுரிகிறேன் என்றும் எனது இந்த வெற்றிக்கு ஒரு ஆசிரியர் தான் முக்கிய காரணம் என்றும் என்னைப் போன்ற பெரிய திறமை வாய்ந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து அரசு பள்ளிகளும் 100% விழுக்காடு பெற வேண்டும் என்றும் அதற்கு ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களிடம் ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில் தலைமையேற்று கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் பேசிய மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் முதலில் உங்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நானும் ஒரு பட்டதாரி பென் தான் என்றும் கூறிய அவர்கள் இதற்கு முக்கிய காரணம் ஒரு ஆசிரியர் தான் என்றும் எல்லா கால கட்டங்களிலும் ஆசிரியர் பணி சிறப்பானது தான் என்றும் உங்களைப் போன்ற ரோல் மாடல்களாக மாணவர்கள் திகழ்கிறார்கள் என்றும் ஆசிரியர்களை பெருமையாக கூறிய அமைச்சர் அவர்கள் பல்வேறு முக்கிய பதவிகளில் பெண்கள் அமர்வது பெருமைக்குறியது என்றும் இந்த மேடையில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் பெண்கள் என்பதை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் மாணவர்களை ஆசிரியர்கள் திட்டினாலோ அடித்தாலோ பெற்றோர்கள் கோபப்பட கூடாது என்றும் உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக தான் எதிர்காலத்திற்காகதான் இது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

தனியார் பள்ளிக்கு நிகராக இன்று அரசு பள்ளி திகழ்ந்து வருவதற்கு ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்கள். மாண்புமிகு புதுவை முதல்வர் அவர்கள் ஆசிரியர்கள் மீது நல்ல அக்கறை வைத்துள்ளதாகவும் கூறினார்கள்.

மேலும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களை விழா மேடையில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.

மேலும் இந்த கல்வியாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகப்படியாக வர ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்றும் மாணவர்களும் நன்கு படித்து படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *