புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர்‌ அலுவலகத்தில்‌ அரியாங்குப்பம் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்‌ பாஸ்கர்‌(எ) தட்சிணாமூர்த்தி ‌ தலைமை தாங்கினார்.
‌ இதில் அரியாங்குப்பம்‌ சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேங்காய்திட்டு,வீராம்பட்டினம்‌ மற்றும்  அரியாங்குப்பம்‌ உள்ளிட்ட பல பகுதிகளில்‌ மின் துறைமூலம்‌ இதுவரை முடிக்கப்பட்ட பணிகள்‌ குறித்தும்‌ விவாதிப்பட்டது.மேலும் வரும் காலங்களில்‌ மேற்கண்ட பகுதிகளில்‌ குறைந்த மின்‌ அழுத்தத்தை போக்குவதற்காக புதிய மின்மாற்றிகள்‌ அமைக்க நடவடிக்கை எடுப்பது. ‌ வீராம்பட்டினம்‌ பகுதிகளில்‌ புதைவிட மின்‌ கேபிள்‌ அமைப்பது ம்‌ புதிதாக உருவான பகுதிகளில்‌ புதிய மின்‌ கம்பம்‌ நட்டு அவர்களுக்கு ( புதிய மின்கம்பம் நட்டு மின் இணைப்பு வழங்குவது.‌ அரியாங்குப்பம்‌ தொகுதி முழுவதும்‌ விடுபட்டுள்ள இடங்களில்‌ புதிய மின்விளக்குகள்‌ அமைத்து தருவது.‌ பல ஆண்டு காலமாக மாற்றப்படாமல்‌ இருக்கும்‌ மின்‌ கம்பிகளை மாற்றி அமைப்பது. மேலும் ‌ அரியாங்குப்பம்‌ தொகுதி முழுவதும்‌ வரும்‌ காலங்களில்‌நடைபெற வேண்டிய பணிகள்‌ குறித்தும் ஆய்வு செய்யப்ட்டது.  இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மின்துறை கண்காணிப்பு பொறியாளர்‌ மற்றும்‌ தலைவர்‌  சண்முகம்‌, கண்காணிப்பு பொறியாளர்‌. ஸ்ரீதான்‌ செயற்பொறியாளர்‌ நகரம்‌ கனியமுதன்‌ செயற்பொறியாளர்‌ கிராமம்‌ செல்வராஜ்‌ செயற்பொறியாளர்‌ கேபிள்ஸ்‌  செந்தில்குமார்‌ உதவிபொறியாளர்‌ நகரம்‌ ஜேம்ஸ்‌‌, உதவி பொறியாளர்‌ கிராமம்‌ தமிழ்ச்செல்வன்,‌  இளநிலை பொறியாளர்கள்‌லூர்துராஜ்‌. செல்வபாண்டியன்‌,  செல்வமுத்தையன்‌ ஆகியோர்‌ ஆய்வு கூட்டத்தில்‌ கலந்து கொண்டனர்‌ மேலும்‌ ஆய்வு கூட்டத்தின்‌ முடிவில்‌ சட்ட மன்ற உறுபினர்‌ ‌ தலைமை கண்காணிப்பு பொறியாளரிடம்‌ ‌ மேற்கொள்ள வேண்டிய பணிகள்‌ குறித்த மனுவை வழங்கினார்‌.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *