காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன் பல பார்வையாளர்கள் மத்தியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மற்றும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில தலைவர் டாக்டர். எஸ். ஆனந்த்குமார் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த 14 வது தேசிய வாக்காளர் தினத்தை அனுசரிக்கும் விதமாக “ஓட்டுக்கு லஞ்சம் வாங்க மாட்டோம்” என்று துண்டுப்பிரசுரம் விநியோகித்து, அதற்கான உறுதி மொழி படிவத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி பொதுமக்களிடையே பரப்புரை செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவளித்தனர். மேலும், பெண்கள், டாடா மேஜிக் ஓட்டுநர் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், இயக்கத் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *