புதுவை வெங்கடா நகரில் உள்ள தமிழ் சங்கத்தில்  இந்திய மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. தேசிய மகளிர் தலைவர்  நாகலட்சுமி தலைமை தாங்கினார்.

ஒழுங்கு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் புவனா  தொகுப்புரை வழங்கினார். புதுவை மாநில மகளிர் செயலாளர் சுப்புலட்சுமி முன்னதாக அனைவரும் வரவேற்று பேசினார்.

புதுச்சேரி மாநில மகளிர் அணி நிர்வாகிகள் கலைவாணி, கவிஞர் கலாவிசு, ஜான்சிராணி, தனலட்சுமி, மங்கலட்சுமி, பொற்கொடி, கவிதா, சித்ரா என்கிற ராக்கி, விசாலாட்சி, ஆனந்தி, வேல்விழி, மல்லிகா, ஜெயலட்சுமி, ராசாத்தி, அருள்பூசணி, சரஸ்வதி, இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

         விழாவில் இந்திய மக்கள் உரிமை நீதி பொது நல சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் சேவாரத்னா டாக்டர் பால.கன்னியப்பன் கலந்துகொண்டு மகளிர்களுக்கு சிங்கப்பெண் விருது மற்றும் கேடயம் வழங்கினார்.

       நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அமைப்பு செயலாளர்கள் செல்வ பார்த்திபன், தேனி சுப்பிரமணியன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் பாண்டுரங்கன், தலைமை வழிகாட்டுதல் குழு அமைப்பு செயலாளர் குமார் என்கிற சின்னசாமி, தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு உழைப்பாளர் ஞானபிரகாசம் தேசிய இணை செயலாளர் பாஸ்கரன் புதுச்சேரி மாநில இணைச்செயலாளர் ரமேஷ் புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் தாபா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினார்கள்.

         இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் லிங்கசெல்வி, தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்புச் செயலாளர் முரளி, தலைமை தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் வினோத், தென் மண்டல செயலாளர் சோனைமுத்து, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி அமைப்பு செயலாளர் தினகரன், தமிழ்நாடு மாநில தொழிற்சங்க இணைச் செயலாளர் சுபவீரன், தமிழ்நாடு மாநில இளைஞரணி இணை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், ஊடகப்பிரிவு மாநில அமைப்பாளர் ஐயப்பன், தமிழ்நாடு மாநில மாணவரணி செயலாளர் சத்தியபாலன், புதுச்சேரி மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் சிவபிரகாஷ், காரைக்கால் ஆரோக்கியதாஸ், புதுச்சேரி ராஜ்மோகன், செபாஸ்டியன், மணிபாலன், அருள், வெற்றிவேல், இருசப்பன், பாலஆறுமுகம், நடராஜன், மனோபாலன், நாகராஜன், வீரராசு, வேலு

         மகளிர் அணி நிர்வாகிகள் துர்காலட்சுமி, கன்னியம்மாள், பர்வீன்பானு, வசந்தா லட்சுமி, பஞ்சுகாமாட்சி, லட்சுமி, வளர்மதி, ஜோதி, ஜீவாஜாக்லின், இந்திராகாந்தி, மாதா, விஜயா, பரித்தா, சியாமளா, தேன்மொழி, கௌரி, வாசுகி, சுபாஷினி, நித்யா உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

      ‌ முன்னதாக சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கருணாநிதி நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *