உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CCI சார்பில் மதர் தெரசா நர்சிங் கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு, மற்றும் நுகர்வோர் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் சேர்மேன் வழக்கறிஞர் S.திருமுருகன் தலைமையிலும் செயலாளர் S.சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. நுகர்வோர் என்பவர் யார் நுகர்வோர் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி நுகர்வோர் கூட்டமைப்பின் பெருந்தலைவர் வழக்கறிஞர்S.திருமுருகன் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

உணவு பாதுகாப்பு பற்றி புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் திருமதி. ஜெயபாரதி, சிவில் சப்ளைஸ் அதிகாரி மகேஷ் ஆகியோர் சிறப்பு விருத்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

நுகர்வோர் கூட்டமைப்பின் செயலாளர் S.சிவக்குமார் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தும் அனைவரையும் வரவேற்றும் சிறப்புரை ஆற்றினார்.மகளிர் அணி தலைவி சுமதி, ராஜதுரை ,புதுச்சேரி கார்த்திக், ராஜேஷ் மற்றும் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு பற்றி நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பஞ்சு மிட்டாயில் நச்சு பொருள் கலந்துள்ளது என்று கண்டுபிடித்து அதனை நம் தேசத்திற்கு முன்னாடியாக தடை செய்ய காரணமாக இருந்த நம் உணவு பாதுகாப்பு அதிகாரி திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நுகர்வோர் கூட்டமைப்பு, மதர் தெரசா நர்சிங் கல்லூரி சார்பிலும் கௌரவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *