புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை தடுக்க வலியுறுத்தியும், சிறுமி ஆர்த்தி பாலியல் படுகொலையை கண்டித்தும் இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பு மற்றும் இளைஞர் இயக்கங்கள் சார்பில் இரண்டு நாள் பிரச்சார பரப்புரை பயணம் நேற்று முன்தினம் திருக்கனூரில் தொடங்கி காட்டேரிக்குப்பம் – பத்துக்கண்ணு – வில்லியனூர் – உழவர்கரை- மேட்டுப்பாளையம் – சாரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு இறுதியாக நேற்று இரவு ராஜா தியேட்டரில் பரப்புரை பயணத்தை முடித்துக் கொண்டனர்.

இந்த பிரச்சார பயணத்தின்போது கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறிய என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசை கண்டித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சார பயணத்திற்கு திமுக மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி.மணிமாறன் தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில தலைவர் பிரச்சார பயணத்தின் நோக்கங்களை விளக்கி நிறைவுறையாற்றி முடித்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், செந்தில்குமார், செல்வநாதன், அமுதாகுமார், திமுக தொகுதி செயலாளர்கள் நடராஜன், மணிகண்டன், கலைவாணன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், மாநில சிறுபான்மை அணி அமைப்பாளர் முகமது ஹாலித், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலிமுல்லா திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அகிலன், கிருபாசங்கர்,

திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சே. பாலபாரதி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அருண், விமல், துணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல், மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சந்தோஷ், சிவராமன், மகளிர் அணி துணை அமைப்பாளர் புஷ்பலதா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன், மாநில தலைவர் முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஆனந்த், பொருளாளர் சஞ்சய், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் முரளி, துணைத் தலைவர் பிரவீன்,

இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன், முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் தமிழ்வாணன், ஆதிரை, இளம் சிறுத்தைகள் எழுச்சு பாசறை இளங்கோ, தமிழ் மாணவர் மன்றம் வினோத், ரமேஷ், விமல், நரேந்திரன், ரோஷன், ரிஸ்வான் திமுக நிர்வாகிகள் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் யோகேஷ், அர்ஷத், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜன், கிளைச் செயலாளர் விமல் ராஜ், கிளை பொருளாளர் சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்று கண்டன உரை ஆற்றினார்.
கஞ்சாவுக்கு எதிரான இந்த இரண்டு நாள் பிரச்சார பயணத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *