தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் கடைபிடித்து, பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024–ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.
இந்தியாவுக்கே முன்னோடியான பல திட்டங்களை செயல்படுத்தி சட்டங்களை உருவாக்கி இன்று இந்தியாவை வழிநடத்தக் கூடிய வகையில் தி.மு.கழகம் தனக்கென தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது.

பேரறிஞர் அண்ணா கண்ட இப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75–வது ஆண்டினை பவள விழாவாக கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே நம் கழகத் தலைவரின் விருப்பம்.
“பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும்” என்று நமது கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதல்வர் அண்ணன் தளபதியார் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறிந்திட செய்ய வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை எனும் வகையில் பவள விழாவை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நமது கழகத்தினரின் இல்லங்கள் – அலுவலகங்களில் கழகக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டுமாய் கழக நிர்வாகிகள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றும் கழகப் பணியில்,

இரா. சிவா, எம்.எல்.ஏ.,
மாநில கழக அமைப்பாளர்,
புதுச்சேரி மாநில தி.மு.கழகம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *