தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர்
இந்தியா டெர்ன்ஸ் பிங்க் (INDIA TURNS PINK) அமைப்பு சார்பில் மார்பக புற்றுநோய் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமின் தொடக்க விழா புதுச்சேரி கடற்கரை சாலை, மேரி கட்டிடத்தில் நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுனர் K. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர்,
மார்பக புற்றுநோயால் பொண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடற்பயிற்சி, யோகா செய்து அதன் பாதிப்புகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள தயக்கம் காட்டக் கூடாது. வீட்டில் உள்ளவர்களும், சமுதாயத்தில் உள்ளவர்களும் இது பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் அன்புக்கு உரியவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள் வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, ITBயின் அமைப்பு தலைவர் ஆனந்தகுமார், விளம்பரப் பிரிவு செயலர் மோகனப் பிரியாஇ துணைத் தலைவர் பிணு ஹாசன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.