தே.பண்டரிநாதன்(எ)
அண்ணாதுரை துனை
ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல்:- 9994189962
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சி வார விழாவை ஒட்டி, கிராமங்களை நோக்கி மக்கள் குறைதீர்ப்பு முகாம் அரியாங்குப்பம் சாமிக்கண்ணு தனம்மாள் திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுனர் K. கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் ஆற்றிய உரையைின் சுருக்கம்.
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வந்திருக்கும் என் அன்புக்குரிய சகோதர – சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் பகுதி தலைவர்கள், அதிகாரிகளோடு சேர்ந்து உங்களுடைய தேவையை புரிந்து கொள்ள உங்கள் கிராமத்திற்கு வந்து இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏனென்றால், எந்த ஒரு நாடும் முன்னேற வேண்டும் என்றால் அங்கே நல்ல நிர்வாகம் இருக்க வேண்டும். நல்ல நிர்வாகம் என்றால், குடிமக்களின் குறைகளை, தேவைகளை தெரிந்து கொண்டு செயல்படுகிற நிர்வாகம் வேண்டும். அந்த நாடுதான் வல்லரசு நாடாக வளர முடியும்.
இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்ற நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டம் தான் இந்த நல்லாட்சி வார விழா திட்டம். (Good Governance Week) நல்லாட்சி என்பது கிராமங்களில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால் கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறது.
இது போன்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் கிராமப்புறத்தில் நட்கும்போது கிராமத்தில் இருக்கின்ற ஏழை-எளிய, சாமானிய மக்கள் அதிகம் பயன் பொறுவார்கள். இந்த நல்லாட்சி நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கமே அதுதான்.
அரசின் திட்டங்களும் அதன் பயன்கள் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் போய் சேர வேண்டும். அப்போதுதான் நாடு முழுமையாக வளர்ச்சி பெற முடியும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை பற்றி சொல்லும்போது “கிராமங்களின் இருந்து நல்லாட்சி என்பது வெறும் முழக்கம் அல்ல. நிர்வாகத்தை கிராமப்புற மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதுதான் அதன் நோக்கம்.
அது மாற்றத்திற்கான ஒரு நல்ல முயற்சி. அதுதான் ஜனநாயகத்தின் உண்மையான சாராம்சம். அங்கே வளர்ச்சி மக்களை சென்று அடைகிறது“ என்று சொன்னார்.
அரியாங்குப்பம் மற்றும் மணவெளி பகுதி மீனவர்கள், விவசாயிகளை அதிகமாக கொண்ட பகுதி என்று சொன்னார்கள். இங்குள்ள மக்கள் அனைவரும் மத்திய-மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களை, நலத் திட்டங்களை அதிகாரிகள் மூலமாக தெரிந்து கொண்டு முழுமையாக பயன் பெற வேண்டும் என்பது என் விருப்பம்.
குறிப்பாக, இந்தியாவை 2025-க்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று பாரதப் பிரதமர் “டி.பி. முக்த் பாரத்“(TB Mukt Bharat) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இது ஒரு தொலைநோக்குத் திட்டம். மக்கள் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டு காசநோய் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும். இதுவரை 40,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் 12 பெண்களுக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அதை எல்லாம் உங்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் அதிகாரிகள் இங்கே உங்களைத் தேடி உங்கள் இடத்திற்கே வந்து இருக்கிறார்கள். உங்கள் தேவைகளை அவர்களிடம் சொல்லுங்கள்.
அதிகாரிகள், மக்களின் தேவைகளை, அவர்களுடைய குறைகளை தெரிந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்று சேரும்போது தான் பாரதப் பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரததத்தை (VIKSHIT BHARAT) நாம் உருவாக்க முடியும்.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு R. செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் திரு தட்சிணாமூர்த்தி, தலைமைச் செயலர் திரு சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் செயலர் திரு நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் திரு குலோத்துங்கன், துணை ஆட்சியர் (தெற்கு) சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு, உள்ளாட்சித்துறை இயக்குநர் திரு சக்திவேல் மற்றும் பதினாறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசுத்துறைக் மூலமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த குறைதீர்ப்பு அரங்குகளைப் துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார். மேலும், தாயின் பெயரில் ஒரு மரம் என்ற பாரதப் பிரதமரின் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகித்தார்.