புதுச்சேரி,முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களது மறைவையொட்டி, புதுச்சேரி குபேர் சாலையில் (கடற்கரைச் சாலை) உள்ள மேரி கட்டட அரங்கில் அவரது திருவுருவப்படத்திற்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னாரது திருவுருவப் படத்திற்கு துணைநிலை ஆளுநர் கு. கைலாஷ்நாதன், மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமிநாராயணன், அரசு கொறடா P.V. ஆறுமுகம் (எ) A.K.D., சட்டமன்ற உறுப்பினர் U. லட்சுமிகாந்தன், அரசு செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) R.கேசவன் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் ந. தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *