தே.பண்டரிநாதன்
(எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா. நம்மாழ்வார் அவர்களின் 11- ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம்தமிழர் கட்சி மணவெளிதொகுதி தவளக்குப்பம நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது
விவசாயம் என்பது வியபாரமல்ல விவசாயம் என்பது வாழ்வியல்
அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு
என்று தன் வாழ்நாள் முழுவதும் தாரக மந்திரமாக தான் ஏறிய மேடைகளில் முழங்கியவர் நம்மாழ்வார்.
இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் ஏற்பட்ட விளைவுகளை தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார் பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இளமையின் உந்துதலில் விவசாயத்திற்காகத் தொடங்கிய நம்மாழ்வாரின் நெடும் பயணம் அவரது இறுதி மூச்சு வரை நீடித்து நிலைத்தே விட்டது. இன்றைக்கு ஏராளமான படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திருப்பியதற்கு நம்மாழ்வாரின் முப்பதாண்டுக் கால பயணம் இருக்கிறது என்றால் மிகையல்ல
இப்படி வாழ் நாள் முழுவதும் தான் நம்பிய இயற்கை விவசாய முறை ஊக்கு விக்க போராடிய நம்மாழ்வார் கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர்,
வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வார் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி போராட்டக்களத்திலேயே 2013ம் ஆண்டு டிசம்பர்30ம் தேதி காலமானார்
இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா. நம்மாழ்வார் அவர்களின் 11- ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு புதுச்சேரி நாம்தமிழர் கட்சி
மணவெளிதொகுதி தவளக்குப்பம நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது
இந்நிகழ்வினை மா செ இளங்கோவன் ஒருங்கிணைத்தார் நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதி உறவுகள் தனசேகர் கோகுல் ரமேஷ் பாலன் முகுந்தன் செல்வம் ஜீவா கனிஷ்கா சாய்சரண்.அனைவரும் பங்கேற்று கோ நம்மாழ்வார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.