தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி
உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக புதுச்சேரியில் வாழும் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறக்கின்ற புதிய ஆண்டு-2025, அனைவரது வாழ்விலும் வளத்தையும் நலத்தையும் தந்து மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் நிலை பெறச் செய்யும் ஆண்டாக அமையட்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி, தலைமைத் தகுதி போன்றவற்றை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஆண்டாகவும் இது அமையும் என்று நம்புகிறேன்.2024 ஆம் ஆண்டில், பெருமழை போன்ற சில சவால்களை சந்தித்த காலத்திலும் நாம் அனைவரும் உறுதியோடும் ஒற்றுமையோடும் இணைந்து பயணம் செய்ததை நான் நினைவுகூர்கிறேன்.
நம்முடைய எதிர்காலத்தை வடிவமைப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. ஒளிமயமான தேசத்தை உருவாக்க நமது அர்ப்பணிப்பை உறுதி செய்வோம். பாரதப் பிரதமரின் “வளர்ச்சி அடைந்த பாரதம் 2047“ என்ற இலக்கை நோக்கி நாம் அனைவரும் பயணிப்போம்.அனைவரும், இந்த புத்தாண்டை குடும்பத்தோடும் நண்பர்களோடும் கொண்டாடி மகிழ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்