புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டுமென வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும், புதுவை
முதல்வரின் பாராளுமன்ற டெல்லி பிரதிநிதி மாகிய திரு. ஜான்குமார் தலைமையில் சட்டசபை நோக்கி பேரணி நடைபெற்றது.
நெல்லித்தோப்பு பாஜ எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார் அலுவலகத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது.

சிவசங்கரன் எம்.எல்.ஏ. ,பாஜக மாநில பொது செயலாளர் மோகன் குமார், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தாமோதரன் , முன்னாள் மாநில பொது செயலாளர் அன்புச் செல்வன் பிஜேபி கட்சியின் முக்கிய பிரமுகர் ரவீந்திரன்
முன்னாள் மாநில மீனவரணித் தலைவரும் , மாநில செயற்குழு உறுப்பினர் நா.புகழேந்தி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக தலைவர் விஜயராஜ், முதலியார்பேட்டை மார்பல் குமார், முருகன், மூர்த்தி உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் பேரணியில் கலந்துகொண்டனர்.
மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதிகள் வழியாக சென்ற பேரணி சட்ட சபையில் முடிவடைந்தது.இதுகுறித்து MLA ஜான் குமார் அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி ….
பிரதமர் மோடி உலக தலைவராக உருவெடுத்துள்ளார் குஜராத்தில் 3 முறை முதல்வர், நாட்டுக்கு 3 முறை பிரதமர் என அனைத்திலும் ஹாட்ரிக் அடிக்கும் மோடி அவர்கள், புதுச்சேரிக்கு நிதியும், திட்டங்களும் தந்து மாநில வளர்ச்சிக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரியை பொலிவுறு நகரமாக மாற்றி உள்ளார்.
வணிகர்கள், சுற்றுலா பயணிகள் என பல தரப்பட்ட மக்களுக்கும் பயன்படும் சிறந்த பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது அதற்கு பிரதமர் மோடி பெயரை சூட்டுவதே, அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் எனவே புதுச்சேரி அரசு அவரது பெயரை சூட்டிட வேண்டுமாய் முதல்வர் ஐயா ரங்கசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.