மாசி மாத அமாவாசை முன்னிட்டு முன்னிட்டு அருள்மிகு கோவிந்தன் ஆண்டவன் அல்லி முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில் நாணயங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சூறை விட்டு பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்
புதுச்சேரி அடுத்த பூஞ்சோலை புது குப்பம் கிராமத்தில் அருள்மிகு கலியபெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு கோவிந்தன் ஆண்டவன் அல்லி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி முன்னிட்டு 66-ம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மயான கொள்ளை விழாவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கும்பம் கொட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து மகா சிவராத்திரி முன்னிட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து கரகம் புறப்பாடு நடைபெற்று வீதி உலா நடைபெற்றது.அங்காளம்மன்,காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தவர்கள் வீதி உலா வர கோவிலில் மயான கொள்ளை நடைபெற்றது.
இதில் நாணயங்கள், நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களை சூறைவிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினார்கள், சூறை விட்ட பொருட்களை ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூஞ்சோலை புதுக்குப்பம் பூஞ்சோலை கவுண்டர்-பட்டமாள் குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகம்,ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் புதுச்சேரி என். ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான செல்வராசு உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். மயான கொள்ளை நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.