ஹெப்பேஜ் இந்தியா நிறுவனம் புதுச்சேரி நாட்டு நல பணி திட்டம் மற்றும் செவிலியர் கல்லூரி, இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிருவனம், புதுச்சேரி இணைந்து முதியோர் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ஜூன் 13 2025 ஆம் ஆண்டு மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அரகத்தில் நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் முதியேங்கள் பற்றி தலைமுறைக்கு இடையே ஆன புரிதல் என்ற தலைப்பில் நாடு முழுவதுமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை (Survey Report – Understanding Intergenerational Dynamics & Perceptions on Ageing) மற்றும் முதியோர்களை இளையோர்கள் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தலைமுறைக்கு இடையே உள்ள இடைவெளியை இணைத்தல் (HUG) நிகழ்ச்சி, இந்திராகாந்தி மருத்துவ கல்லூாயில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரு Dr.S. சத்தியபாபு, இணை இயக்குநர், ஹெய்ப்பேஜ் இந்தியா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், திரு வேணுகோபால் ராமலிங்கம், தலைவர், திட்டமேலாண்மை அலுவலகம், ஹெய்ப்பேஜ் இந்தியா, அவர்கள் நெறய்ப்பேஜ் நிறுவனம் செயல்படுத்தும் திட்டங்களை பற்றியும் நாடு முழுவதுமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை பற்றியும் எடுத்துரைத்தார். திரு S.D. சுந்தரேசன், IAS செயலர், சமூக நலத் துறை, புதுச்சேரி அவர்கள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார். திருமதி. P. ராகினி,, இயக்குநர், சமூக நலத் துறை, புதுச்சேரி அவர்கள் ஆய்வு அறிக்கையையின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

திரு. Dr. C. உதயசங்கர், இயக்குநர். இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி, புதுச்சேரி அவர்கள் தலைமுறைக்கு இடையே உள்ள இடைவெளியை இணைத்தல் (HUG) நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

திரு. Dr. D. சதிஷ்குமார், மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகர், புதுச்சேரி அவர்கள் மற்றும் திரு. S. கருணாநிதி, கள அலுவலர், சமுக நலத் துறை. புதுச்சேரி அவர்கள் திரு. Dr. E. பிரமிளா தமிழ்வாணன், முதல்வர், செவிலியர் கல்லூரி, இந்திராகாந்தி மருத்துவமனை, புதுச்சேரி ஆகியோர்கள் தலைமையில் அனைவரும் முதியோர் வன்கொடுமைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 30 க்கும் மேற்பட்ட தாமரைக் குளம் முதியோர் கிராமத்தில் கடலூர் இருந்து முதியோர்கள் மற்றும் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியை சார்ந்த நாட்டு நல பணி திட்ட செவிலிய மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

திரு. R. தயாநிதி, ஒருங்கிணைப்பாளர், ஹெல்ப்பேஜ் இந்தியா, அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திரு. D. மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர், ஹெல்பேஜ் இந்தியா, அவர்கள் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியை ஹெய்ப்பேஜ் பணியாளர்கள் மற்றும் திரு ஜெகதீஷ், நாட்டு நலப் பணி திட்ட ஆசிரியர் செவிலியர் கல்லூரி,அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *