காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
திரு.ராகுல்காந்தி அவர்களின் 55 வது பிறந்தநாள் விழா
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக பல்வேறு இடங்களில் நலதிட்ட உதவிகள்
வழங்கிசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த பொதுச்செயலாளர் SMA.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி கருவடிகுப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,
உணவு வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தொகுதியின் முன்னாள் அமைச்சர் MOHF.ஷாஜகான் அவர்கள்
தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும்,மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினருமான
V. வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர்V.நாராயணசாமி,சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்M. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்M.கந்தசாமி, முன்னாள்
அரசு கொறடா RKR.அனந்தராமன்,முன்னாள் துணை சபாநாயகர் MNR.பாலன், முன்னாள் வாரிய தலைவர் கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் கட்சியின்
மாநில,மாவட்ட,வட்டார,அனைத்து பிரிவுகளின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.