இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பிறகு 2028ம் ஆண்டு நடைபெற வுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், ஒலிம்பிக் சங்க சிஇஓ முத்துகேசவலு, பொதுச்செயாளர் தனசேகர், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் புதுவை விளையாட்டு வீரர்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெளியூர்களுக்கு சென்று வெற்றிப்பெற்று வருகின்றனர். ஏசியா விளையாட்டு போன்ற வெளிநாடுகளுக்கு

சென்று வெற்றிப்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு இன்னும் பல வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தால், இன்னும் பல விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. பள்ளி கல்வித்துறை விளையாட்டு பிரிவையும் சேர்த்து கவனித்து வந்தது. தற்போது அதற்கென்று தனிப்பிரிவு உருவாக்கியுள்ளோம். அதற்கான இயக்குனர் விரைவாக நியமிக்கப்படுவார்கள்.

பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகள், ஊக்கத்தொகை சரியாக வழங்க முடிய வில்லை. அதனை போக்க விரைவாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்தாண்டு விளையாட்டு ஊக்கத்தொகை
வழங்கப்படும். அதற்கான நிதி ரூ.8 கோடி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பதக்கங்கள் வென்றவர்களுக்கு விரைவில் வழங்ப்படும். தனியார் இடங்களுக்கு சென்று பல பேர் விளையாடுகின்றனர்.

அரசு உருவாக்கிய இடங்களுக்கு சென்று யாரும் விளையாடுவதில்லை. விளையாட்டு வீரர்கள் விருப்பப்படும் பகுதிகளில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்துகொடுக்கப்படும். விளையாட்டுக்கு பயிற்சி அளிக்க கூடுதலாக பயிற்சியாளர் தேர்வு செய்யவுள்ளனர். விளையாட்டு திடல் கள் அமைத்து கொடுத்தால் அதனை சரியாக பராமரிப்பது கிடையாது. இது பெரிய குறையாக உள்ளது.

உப்பளம் திடலை முழுமையாக பராமரிக்க வில்லை. காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பரமாரிக்க
வேண்டும். அப்படி இருந்தால் இன்னும் விளையாட்டு வீரர்கள் நிறைய பதக்கங்களை வெல்வார்கள்.

அரசு விளையாட்டு மைதானங்களை அமைத்து கொடுத்துள்ளது. அதனை வீரர்கள் சரியாக பயன்ப டுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *