புதுச்சேரி மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிககளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேதகு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் மாநிலங்கள் அவை உறுப்பினர், மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் செல்வகணபதி அவர்களிடமும் மனுக்கள் அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, ஸ்ரீ. மகேஷ் ரெட்டி மாநில சமூக ஊடக பொறுப்பாளர், சக்திவேல் ரௌத்திரம், மாநில பொறுப்பாளர், பாரத பிரதமரின், நமது லட்சியம்-வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 ஆகியோர் உடன் இருந்தனர்.
மீனவ மக்களின் கோரிக்கைகள்:
- 17-மீனவ கிராமங்களில் கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுத்திட நடவடிக்கை. இதன் மூலம் கரை மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் நீர் மாசுபடுதல் முழுமையாக தவிர்க்கப்படும்.
- மீனவ கூட்டுறவு நலசங்கங்களின் நிதிப்பற்றக்குறைகளை போக்கிட நடவடிக்கை. இதன் மூலம் ஆதாரம் முதலீடு, சிறு மற்றும் குறு கடன்கள் அதிக அளவில் வழங்கப்படும்.
- புதுச்சேரி புதிய துறைமுகத்தில் குளிர் பதன கிடங்கு (COLD STORAGE) அமைத்து மீனவர்களின் பொருளாதாரம் மேம்படுத்த கோரிக்கை.
- மீனவர்களுக்கு இடுபொருளாக மீன்பிடி வலைகள், குளிர் பதனிடும் பெட்டிகள், கூடைகள் மற்றும் கயிறுகள் உள்ளிட்ட மீன்பிடிக்க உதவிடும் நலத்திட்டங்களை அதிகளவில் வழங்க கோரிக்கை.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்:
- மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டத்தை( Rpwd act 2016) முழுமையாக செயல்படுத்திட மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும்
- மாற்றுத்திறனாளிகளின் நல ஆணையம் அமைத்து ஆணையர் நியமனம் செய்திட வேண்டும்
- மாவட்ட அளவிலான கமிட்டி மற்றும் மாநில ஆலோசனை வாரியகூட்டங்களை உடனடியாக கூட்ட வேண்டும்
- பொதுத்தேர்வில் மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
- அனைத்து அரசு கட்டிடங்களிலும் மற்றும் பொது கட்டிடங்களிலும் கடற்கரைகள் ஆலயங்கள் மற்றும் சுற்றுலா தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிட வேண்டும்
- மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்காக சிறப்பு நிரந்தர பொருட்காட்சி அரங்கம் அமைத்து தர வேண்டும்
- அனைத்து துறைகளிலும் நான்கு சதவீத வேலைவாய்ப்புக்கான அரசாணை உருவாக்கிட வேண்டும்
- அனைத்து துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய பணியிடங்களை கண்டறியும் குழு அமைக்க வேண்டும்(job identification committee)
- விளையாட்டுத் துறையின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவை உருவாக்கி நிபுணர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும்
- சமூக பாதுகாப்பு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்கிற 2020ம் ஆண்டின் அரசாணையை அனைத்து துறைகள் மூலமாகவும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
- அனைத்து அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காண்ட்ராக்டில் வேலை செய்யக்கூடிய மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கிட வேண்டும்..