செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நாலாம் கட்ட கூட்டுப் போராட்டம்
புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து நுழைவாயில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாயத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்
மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி 1.01.2016 முதல் 2.10.2018 வரையிலான 33 மாதங்களாக நிலுவைத் தொகை வழங்க உத்தரவு
வெளியிட வேண்டும்
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு நேரடியாக பென்ஷன் மற்றும் நிலுவைத் தொகைகள் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் 18.10.2002 தற்காலிகஅந்தஸ்து பெற்ற 232 ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் வழங்க உத்தரவிட வேண்டும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து ஊழியர்களையும் பணி நிரந்தர செய்ய வேண்டும் என்று பல கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் கிருஷ்ணமூர்த்தி நாகராஜன் அம்பிகாபதி ராஜேந்திரன் ஆனந்த கணபதி பழனி நாகராஜன் வீரன் ராஜேந்திரன் முருகப்பன் சிறப்புரை பெருமாள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்