V C A & P C A தினத்தை முன்னிட்டு இன்று FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CONSUMER CONFEDERATION OF INDIA ‘CCI’, சார்பாக மதர் தெரசா நர்சிங் கல்லூரி புதுச்சேரியில் , கல்லூரி வேந்தர் மருத்துவர் V.ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் மருத்துவர் E.பிரமிளா தலைமையில் நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் சட்டங்கள் குறித்தும், தரமற்ற பொருட்கள், போலி பொருட்கள் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் FEDCOT INDIA CONSUMER MOVEMENT மாநிலத் செயலாளர் S.சிவக்குமார் அவர்கள் CONSUMER PROTECTION IN DIGITAL ERA என்ற தலைப்பில் நுகர்வோர் சட்டங்கள் குறித்தும் மற்றும் B I S CARE செயலி மூலம் I S I தரத்தை அறிந்து கொள்வது மற்றும் தங்க நகைகளை வாங்கும் பொழுது HUID சரி பார்ப்பது எப்படி என்பது குறித்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
புதுச்சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜூடு ஆனந்தராஜ் அவர்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் எப்படி தொடர வேண்டும் என்பது பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிS. ரவிச்சந்திரன் அவர்கள் உணவு பொருட்களில் கலப்படம் குறித்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டறிவது என்பது பற்றியும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாநிலச் துணை செயலாளர் S கார்த்தி அவர்கள் MY.GRIEVANCE ONLINE PORTAL செயலி குறித்தும் அதன் பயன் குறித்தும் மாணவர்குக்கு எடுத்து கூறினார்.
நெடுங்காடு தொகுதி செயலாளர் அருள் பிரகாஷ் அவர்கள் V C A & P C A குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
இந்நிகழ்வில் உருளையன்பேட்டை செயலாளர் ராஜேஷ் குமார், திரு.வெங்கடேஷ் மற்றும் மதர் தெரசா நரசிங் கல்லூரியில் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக மருத்துவர் K. கமலா அவர்கள் நன்றி உரை கூறினார்கள்.
புதுச்சேரி மதர் தெரசா நர்சிங் கல்லூரியின் வேந்தர் மருத்துவர் V.ரவிச்சந்திரன் அய்யா அவர்களும்,மருத்துவர் E.பிரமிளா அவர்களும் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி S. ரவிச்சந்திரன் அவர்கள் மூலமாக அன்னை தெரசா சேவை விருது மாநில செயலாளர் சிவகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.