புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மணவெளி தொகுதி நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்று படுகை வடகறையில் புதியதாக 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு முதன்மை நீர் உந்து குழாய்கள் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று 27.09.2023 காலை நோணாங்குப்பம் பகுதியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தினால் மணவெளி மற்றும் அரியாங்குப்பம் தொகுதியில் நிலவுகின்ற குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டு தேவையான அழுத்தத்துடன் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு பாஸ்கரன் உதவி பொறியாளர் திரு சுப்பாராவ் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திரு நாகராஜ் இளநிலைப் பொறியாளர் திரு சுரேஷ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தர்மகத்தா: சீதாராமன்
நாட்டாமை வெங்கடாசலம் சந்திரகேசன், சந்திரன், தண்டபாணி,எம்பி பாஸ்கரன், பாலகிருஷ்ணன், குமரன், அன்பு, பழனி, தினகரன், முருகன், ஆறுமுகம், எஸ்விஎஸ் குமரன், சுரேஷ், செந்தில், சந்துரு, சக்திவேல், உன்னிகிருஷ்ணன், சித்ரா, அனிதா, வல்லரசி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *