ச.முருகவேல் நிருபர் நெட்டப்பாக்கம்

நெட்டப்பாக்கம்

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கர்பிணிப்பெண்களுக்கு, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

நெட்டப்பாக்கம் ஶ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் திடலில் நடந்த இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குநர் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சித்துறை அதிகாரி கார்த்திகேசன், செயற்பொறியாளர் கார்த்திகேயன், டாக்டர் பிரமீளா, டாக்டர் மணிமாறன் , காவல்துறை துணை உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றப்பட்டு வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கர்பிணிப்பெண்களுக்கு நலங்கு வைத்து, வளையல் அணிவிக்கப்பட்டது. பலகாரங்கள், இனிப்புகள் உட்பட வரிசைப்பொருட்கள் சபையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் நிகழ்ச்சியில் பொம்மலாட்டம், சிறுமிகளின் விழிப்புணர்வுபாடல்கள் பாடப்பட்டன. பல்வேறு சமைத்த சத்துணவுகள், சத்தான உணவுதானியங்கள், காய்கறிகள் போன்றவைகள் அடங்கிய கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவல் குழு தலைவர் முருகன், செயலாளர் செங்கதிர், பெண்போலீஸ் நதியா, பொதுப்பணித்துறை ஓ.எஸ். முத்துக்கிருஷ்ணன், அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் வரலட்சுமி, சங்கர்தேவி, லலிதா, மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் குழுவைச்சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.இறுதியாக நெட்டப்பாக்கம் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் கமலா தேவி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *