புதுச்சேரி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்று சிறப்புரை !
கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக மாநில உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களுக்கு எதிராகவும், மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் சிபிஎம் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ஆளுநர்களின் அடாவடிப் போக்கை கண்டித்தும் கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன், திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், தொகுதி செயலாளர் இரா. சக்திவேல், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன், அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர் அணி அஜிபாஷா, பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்