பொதுப்பணித்துறை மூலம் வி. மணவெளி கிராமத்தில் ரூ. 32 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !


புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வி. மணவெளி கிராமத்தில் அமைந்துள்ள அன்னை தெரேசா நகர், நிர்மல் நகர், கமலா நகர் சாலை சந்திப்பில் ஆற்றுவாய்க்காலின் குறுக்கே பாலம், தண்டுக்கரை வீதி சந்திப்பில் பாலம் என பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூ. 32 லட்சம் செலவில் மூன்று பாலங்கள் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பாலங்கள் கட்டுமான பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில், பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தர்மராஜ், சபாபதி, பாலகுரு, ராஜேந்திரன், வாசு, நடராஜன், ராதாகிருஷ்ணன், சக்திவேல், அருள்தாஸ், பழனிவேல், ஜீவானந்தம், சிவா, ரமேஷ், கந்தசாமி, வெங்கடேசன், பாண்டியன், பன்னீர், ரவிக்குமார், நாகராஜ், வேல்முருகன், பூபாலன், சுப்ரமணி, மணிகண்டன், மணி, லோகநாதன், முருகையன், பொன்னுசாமி, விஜயன், மணி, தீனதயாளன், சதீஷ், ஸ்ரீதர், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதி திராவிடர் அணி துணை துணைத் தலைவர் கதிரவன், இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை அமைப்பாளர் தேசிகன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், நிர்வாகிகள் சபரிநாதன், ஜனா, சுப்ரமணி,விருதாச்சலம், ரமேஷ், மிலிட்டரிமுருகன், கார்த்திகேயன், தட்சிணாமூர்த்தி, பாலு, கமல் பாஷா, ஹாலித், முத்து, கோதண்டம், அன்பு, ரவி, பரதன், ரகு, ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *