பூரணாங்குப்பம் அடுத்து புதுக்குப்பம் அழகிய கடற்கரையை பெற்றுள்ள மீனவ கிராமத்தில் நமது தமிழரின் பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் நிறைந்த பனை மரங்கள் நிறைந்த பகுதியாகும் அண்மையில் தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக புதுச்சேரி கவர்னர்களை வைத்து பல்லாயிரக்கணக்கான பனை விதைகள் பூரணாங்குப்பம் தனசுந்தரம்பாள் சாரி டெபுள் சொசைட்டிபனை நடும் குழு வினர் நட்டுள்ளனர்.
மேலும் தற்போது புதுக்குப்பம் கடற்கரை ஓரங்கள் பனை மரங்களால் வளர்ந்து புயல் பாதுகாப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்ற இயற்கையை பாதுகாத்து வருகிறது

அண்மையில் வந்த பென்ஜால் புயலில் கூட பெயரில் கூட புயலினால் பனை மரங்கள் அதிகம் இருந்ததினால் புதுகுப்பம் கிராமம் பெரிய அளவில் பாதிப்படையவில்லை பனை மரங்கள் புயலின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடியது நிலத்தடி நீரை சேமித்து குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது
மேலும் பனை நொங்கு பனங்கிழங்கு பனம்பழம் போன்றவையும் மக்களுக்கு மிகப்பெரிய உணவாக அமைந்துள்ளது இவ்வளவு பெருமை வாய்ந்த பனை மரத்தை யாரோ சில சமூக விரோதிகள் நேற்று இரவு தீயிட்டு கொளித்தி உள்ளார்கள் இதனை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் உடனே காவல்துறை தலையிட்டு சமூக விரோதிகளை கைது செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பனை மரம் பாதுகாக்கும் குழுவினர்