புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.
செயலர் பாவலர் சீனு.மோகன்தாசு வரவேற்பு உரையாற்றினார். இம்மாத நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் மு.கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்து பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
பங்கேற்ற அனைவரும் திருக்குறள் கூறினார்கள்.சிறப்பு விருந்தினர் புதுச்சேரி நகராட்சி ஆணையர் மு.கந்தசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் தமிழ்மாமனி ந.ஆதிகேசவன்,பொருளர் மு.அருள்செல்வம்,துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு, துணைச் செயலர் தெ.தினகரன், பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன், கலைமாமணி எம்.எஸ். இராஜா, பொறிஞர் மு.சுரேஷ்குமார் அ.சிவேந்திரன்,கவிஞர் இர.ஆனந்தராசன், கலைமாமணி கோ.பாரதி, முனைவர் அருள்ராஜ்,தொழிலதிபர் பொற்செழியன், வீரம்மாள், சாது.அரிமா வளவன்,திருக்குறள் சண்முகம், க.சத்யானந்தம்,ஈஸ்வரி மற்றும் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள்,ஏராளமான பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர் .