Times of Tamilnadu
Address: No. 236 & 238, Pudhu Nagar, Govindha Salai,
Opp. Water Tank,Near Mani Electronics, Puducherry-605001.
Phone: 04132191145
Mobile: 9943539775
![]() Founder & Editor | Dr. T.G. MANOHAR, B.Sc., M.A., (Journalisam),M.A., (Criminal & Police Science) L.L.B., M.L (Criminology)., Ph.D (Honorary)
Editor: Maalai Times (Online e-Paper -You Tube Channel) |
![]() News Editor | A. Haridass Arumugam News Editor: Times of Tamilnadu (Online e-Paper -You Tube Channel)
PRO: Puducherry Journalists Association |
- திண்டுக்கல்லில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,327 வழக்குகள் தீர்வுதிண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது வழக்குகளை 14 அமர்வுகளில் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். மொத்தம் 2,327 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் தீர்வுத்தொகையாக ரூ. 19,81,98,931 வசூலிக்கப்பட்டது.
- (no title)தூத்துக்குடி 40வது வார்டு அதிமுக சார்பில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான எல். எட்வின் பாண்டியன் ஏற்பாட்டில் 550 பேருக்கு சில்வர் பாத்திரம் ஐந்து பேருக்கு தையல் இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, மற்றும் குப்பைக்கும் வரி போட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றச்சாட்டு. தங்கத் தாரகை புரட்சித் தலைவி இரும்பு பெண்மணி அம்மா என… Read more: (no title)
- தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் நாளை 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பகுதி சபா கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது… Read more: தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் 39 வது அமைப்பு தின விழாசெங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம்சார்பில் 39 வது அமைப்பு தின விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 39 வது அமைப்பு தின விழாவையொட்டி சங்க கொடி ஏற்றப்பட்டு சங்க நிர்வாகிகக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்குமதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைவர் எ.தசரதன் செயலாளர் எம்.எஸ்.தயாநிதி பொருளாளர்… Read more: தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் 39 வது அமைப்பு தின விழா
- அரியலூரில் நடந்தது சீதாராம்யெச்சூரி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள்அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக பணியாற்றிய சீதாராம்யெச்சூரி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்பு அரியலூர் மருத்துவக் கல்லூரி உடல்கூராய்வு மருத்துவர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு தோழர் சீதாராம்யெச்சூரி அவர்களின் தியாகங்களை எடுத்து கூறினார் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உடல் தானம்… Read more: அரியலூரில் நடந்தது சீதாராம்யெச்சூரி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள்
- சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!லட்சியம் படைப்பாளர் களம் சார்பில் சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்து பேசுகையில், லட்சியம் படைப்பாளர் களம் கற்றதையும் பெற்றதையும் மற்றவருக்கு வழங்கி அறிவுச்சுடர் ஏற்ற உள்ள களமாகும். வாழ்வியல் முன்னேற்றம் அனைவருக்கும் தேவை. ஒவ்வொருவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் லட்சியம் படைப்பாளர் களம் செயல்படுகிறது. அவ்வகையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று இருப்பவர்களுக்கு பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும்,… Read more: சமூக செயற்பாட்டாளருக்கு லட்சியம் படைப்பாளர் விருது!
- நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டம்திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் கரூரில் வரும் செப்டம்பர் 17 தேதி திமுக முப்பெரும் விழாவில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பெருந்திளாக பங்கேற்க வேண்டும் என குடவாசல் அருகே திமுக சார்பில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதுக்குடி தனியார் அரங்கில் திமுக சார்பில் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன குறிப்பாக… Read more: நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பாகநிலை முகவர் கூட்டம்
- வலங்கைமான் ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு செய்தார்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல விடையல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் மத்திய, மாநில அரசு நிதிகளின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலங்கைமான் ஒன்றியம், மேல விடையல் ஊராட்சியில் குப்பசமுத்திரம் கலைஞர் நகரில் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நான்கு… Read more: வலங்கைமான் ஒன்றியத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடு கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு செய்தார்
- ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சிதமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி – நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை, கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். தனியார்… Read more: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி
- திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம் நடைபெற்றுவருவதை திருவாரூர் மாவட்ட கலெக்டர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண்.33-ன்படி தமிழகத்தில் மருத்துவ வசதி குறைந்த, சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த… Read more: திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்
- கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வுகரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு.. கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுகவின் கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், ஏற்பாடு பணிகள் நடைபெறும் இடங்களை வீட்டு வசதி துறை அமைச்சர் க.முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில்… Read more: கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு
- கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ -ஐ துவக்கின் இந்த பிரச்சாரத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அறிமுகம் செய்தார். அவருடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,… Read more: கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்
- கமுதியில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்கமுதியில் ஆசிரியர்கூட்டணி பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வு பெற்ற பெருமாள்குடும்பன்பட்டி ஆசிரியர் சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் . சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட ஏ.தரைக்குடி, இடையங்குளம் பள்ளி ஆசிரியைகளுக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
- நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ராமசாமிபட்டி,நீராவி, என்.கரிசல்குளம் எம்.எம். கோட்டை, மேலராமநதி, கே.எம். கோட்டை, ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்… Read more: நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி பரப்பளவில், பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த ஓர் அழகான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது…. இந்தியாவில் முதன்முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக அணிந்து… Read more: ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்
- கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழாகரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாரதப் பிரதமர், விஸ்வகுரு நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழாவாக கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் வீரவேல் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் மதிய… Read more: கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழா
- காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம்-நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் – நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது…. கடந்த இரு தினம் முன்பு திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டிணம் வழியாக தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காயல் பட்டிணம் செல்வதற்காக் ஏறும் இஸ்லாமிய பெண்னை ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நடத்துனரின் இத்தகை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து சமூக மக்களும்… Read more: காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம்-நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !
- மாநில அளவிலான யோகா போட்டிநேஷனல் யோகா அஸோஸியேஷன் ஆப் இந்தியா மற்றும் யோகா பெடரேஷன் ஆப் ஆசியா அவர்கள் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி,பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 56 பதக்கங்களுடன் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.. மாநில அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் கிரியேட்டிவ்… Read more: மாநில அளவிலான யோகா போட்டி
- (no title)காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் செட்டி தெரு பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கழக சாதனைகளை விளக்கிபொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார் உடன் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர், மாவட்ட… Read more: (no title)
- பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்கரூர் செய்தியாளர் மரியான்பாபு பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு-10,000- பேரை திரட்ட முடிவு செய்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர… Read more: பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ வி ஆர் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய கேலக்ஸி முகவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் ஹாலில் நடைபெற்றது. முகாமினை கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் பொது மேலாளர் அபுசாலிஹ், திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள்.கும்பகோணம் கிளை பிரிவு தலைவர் நவீன் வரவேற்றார். மருத்துவமனையின் மருத்துவர் சசி பிரியா முன்னிலை வகித்தார்.திருச்சி மண்டல பயிற்சியாளர் மனோஜ்குமார் முகவர்களுக்கு நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.… Read more: கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
- மாதவரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாதவரம் மண்டலம் ,29 வார்டு .ஜி.என்.டி.சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மையங்களுக்கு சென்று சிகிச்சைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைதொழிலாளர் நலன் மற்றும்… Read more: மாதவரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
- வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வயதான முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று தூத்துக்குடி… Read more: வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்